பயிர் காப்பீடு வழங்க கோரி மத்திய அமைச்சரிடம் மனு

2018-19 க் கான பயிர் காப்பீட்டு தொகை கடந்த சில மாதங்களுக்கு முன் வழங்கினர். இதில், ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள பட்டாதாரருக்கு முதலாவதாகவும், அதற்கு மேல் உள்ள பட்டாதாரருக்கு பின்னர் வழங்குவதாகவும் கூறினர். ஆனால், ஐந்து ஏக்கருக்கு உள்ள பட்டாதாரர்களுக்கு இன்னும் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இந்நிலையில், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள பட்டாதாரருக்கு எப்போது கிடைக்கும் என விவசாயிகள் மத்தியில் சந்தேகம் எழும்புகிறது. ஆகையால், வழங்காதோருக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரசாயன மற்றும் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், கடலாடி நகர் தலைவர் சத்தியமூர்த்தி மனு கொடுத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இராமநாதபுரம் மாவட்ட செயலர் ராமசாமி, கடலாடி ஒன்றிய துணைத்தலைவர் பால்சாமி, ஒன்றிய பொருளாளர் பூமிநாதன், ஒன்றிய நிர்வாகி ராஜா உடனிருந்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..