போலீ ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பல ஆயிரம் பேருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதாக புகாா்

போலீ ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பல ஆயிரம் பேருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் ஜஸ்டின் பிரபாகர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், லைசென்ஸ் மற்றும் பாட்ஜ் பெற அரசு நிர்ணயித்த கல்வித்தகுதியை விட குறைந்த கல்வித் தகுதி உள்ள நபர்களுக்கும் போலி ஆவணங்கள் மூலம் லை சென்ஸ் மற்றும் பாட்ஜ் வழங்கியது தெரியவந்தது. இதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் லைசென்ஸ் தயாரிக்கும் பணியில் உள்ள பாண்டன் நிறுவனத்தைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர் சவுந்திர சுப்பையா உடைந்தையாக இருந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த செந்துõர் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் பாண்டியராஜன், கிருஷ்ணா டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் முத்துராமன், புரோக்கர் அப்பாஸ் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து லைசென்ஸ் பெற ஆட்களை அழைத்துவந்து மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..