களவு வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது

மதுரை மாநகர்  தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2013 வருடம் பதிவு செய்யப்பட்ட கன்னக்களவு வழக்கில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த பாலமுருகன், என்பவர் மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது கைரேகையை ஆய்வு செய்த விரல்ரேகை பிரிவினர் தெப்பக்குளம் காவல் நிலைய கன்னக்களவு வழக்கின் குற்ற சம்பவயிடத்தில் பெறப்பட்ட கைரேகையுடன் ஒத்துப்போவதாக அறிக்கை அளித்ததின் பேரில், குற்றவாளியை விரைந்து பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் குற்றம் பழனிகுமார்  மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர், நகர் ரமேஷ்  நேரடி கண்காணிப்பில்  தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கீதாதேவி தலைமையில் தனிப்படை அமைத்து திருப்பூரில் வைத்து பாலமுருகனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.6,10,000/- பணமும், ரூ.50,000/-மதிப்புள்ள சுமார் 1 கிலோ 150 கிராம் எடையுள்ள வெள்ளி கட்டியும் கைப்பற்றப்பட்டது. மேலும் எதிரியுடன் சேர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு எதிரியான கணேஷ்குமார்,  என்பவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். கன்னக்களவு வழக்கில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..