உசிலம்பட்டி- விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு உதவிய மருத்துவாின் மனிதநேயம்.

உசிலம்பட்டி கீழப்புதூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு உசிலம்பட்டி மருத்துவமனையில் 24 மணி நேர சர்வீஸ் தனது பணியை முடித்து வீடு திரும்பிய மயக்கவியல் மருத்துவர் பிரதீவ்முதலுதவி அளித்தார்.மேலும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தொிவித்த நிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதை அடுத்து ஷேர் ஆட்டோவில் அங்கிருந்த சௌந்திரபாண்டி என்ற இளைஞருடன் அந்த மாணவனை தூக்கி ஆட்டோவில் அமர வைத்து அவா்களுக்கு முன்னரே மருத்துவமனை வந்தார்..மருத்துவமனையிலும் தற்போது தொடர் சிகிச்சை அளித்து சிறுவன் நன்றாக இருக்கிறான் என்று தெரிந்த பின்னரே கிளம்பிச் சென்றாா்.பல பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த நிலையில் நமக்கென்ன என்று இல்லாமல் ஓடோடிச் சென்று உதவிய மருத்துவாின் மனித நேயத்தை பொதுமக்கள் பொிதும் பாராட்டினா்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..