மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்-ஏராளமானோர் பங்கேற்பு…

மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்-ஏராளமானோர் பங்கேற்பு…

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகவும் ,குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கண்டித்தும் ஜமாத்துல் உலமா சபை மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் எங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றது.

அந்த வகையில் தென்காசி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பிலும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 19.02.20 இன்று தென்காசி புதிய பேரூந்து நிலையம் முன்பு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 3500 க்கும் அதிகமானோர் திரண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும்,குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் மூன்றடுக்கு பாதுகாப்பு காவல்துறையினரால் போடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராட்டம் நீடித்து காவல் துறையினர் அறிவுறுத்தியதன் பேரில் கலைந்து சென்றனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..