Home செய்திகள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கேள்வி-அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு..

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கேள்வி-அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு..

by Askar

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கேள்வி-அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு..

மத்திய பா.ஜ.க கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.சில மாநில முதல்வர்கள் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் எனது இந்த கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்று தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒரு இந்துவுக்கும் , முஸ்லிமுக்கும் என்.ஆர்.சி சான்று சரி பார்ப்பில் இரண்டு பேர்களின் ஆவணங்களும் தவறானது என்பதை கண்டுபிடித்து விட்டால் இந்துவுக்கு குடியுரிமை கொடுத்து விடுவீர்கள். முஸ்லிம்களை என்ன செய்ய போகிறீர்கள் என்கிற கேள்விக்கு மட்டும் பதில் செல்லுங்கள் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் தயவு செய்து பதில் தர செல்லுங்கள். இந்திய பிரஜைகளுக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராது. இவர்கள் தவறான வழியில் பிரச்சாரம் செய்து வருவதாக கூறுகிறீர்களே அவர்கள் இந்திய பிரஜைகளாக நிருபித்து விட்ட நிலையில் தான் பிரச்சினை வராது என்பது தான் உண்மையாகும் .

ஆதார் அட்டை இருந்தால் போதும் என்கிறீர்களே, அப்படி எனில் உங்களிடம் தான் டேட்டா பேஸ் உள்ள நிலையில் இந்த சட்டத்திற்கு என்ன தேவை வந்தது ?

எந்த தெளிவும் இல்லாமல் எதற்காக இது போன்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை கூறாமல் ஏன் போராட்டங்களை எதிர் கட்சியினர் தான் தூண்டி விடுவதாக கூற வேண்டும்.

இத்தனை சிக்கலை வைத்து கொண்டு எதிர்கட்சியினரின் தூண்டுதல் காரணமாகத்தான் போராட்டம் நடைபெறுவதாக கூறுவது மிகவும் அபத்தமான ஒன்றாகும்.

நாட்டில் எத்தனையோ பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் உள்ள நிலையில் என்.ஆர்.சி யை அரசு கைவிட வேண்டும் என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!