விக்கிரமங்கலம் அருகே பழமையான ஆங்கிலேயா் கால பள்ளிக்கட்டிடத்தை பராமாித்து பாதுகாக்க பொது மக்கள் வேண்டுகோள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அருகில் அமைந்துள்ள ஆலங்கொட்டாரம் என்ற ஊரின் மிக பழமையான ஒரு அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது.அரசஞ் சண்முகனார் என்பரால் கட்டப்பட்டு ( இவா் மன்னரா-ஜமீன்தாரா என்பது தொியவில்லை ).இப்பள்ளியின் பெயா் அரசஞ் சண்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – சோழவந்தான்.பள்ளி கட்டிட திறப்பு விழா நாள். 27.07.1931 .திறந்து வைத்தவர் பெயர். R. G.GRIEVE ESQ. M.A. DIRECTOR OF PUBLIC INSTRUCTION.CHENNAI.என அப்பள்ளி கல்வெட்டில் உள்ளது.இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என அந்த ஊர் பொது மக்கள் கூறுகின்றனர்.அரச குடும்பத்தினர் இப்பள்ளியை நிறுவினார்களா அல்லது ஆங்கில அரசு உருவாக்கியதா என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.ஆனால்  இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தமிழ்நாட்டில் பள்ளி இருந்தற்கும் அப்பொழுதே பின்தங்கிய பகுதியான இப் பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் கல்வி பெற்றதற்கும் இப்பள்ளி சாட்சியாய் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பள்ளி பொது தற்போது பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள்.இப்பபள்ளி வளாகத்தில் உள்ள பல மரங்கள் பட்டு போய் உள்ளது.

எந்த நேரத்திலும் விழ வாய்ப்பு உள்ளது.மேலும் பள்ளி கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ள போதும் மாணவர்கள் தொடர்ந்து பழைய கட்டிட பகுதிகளில் வெளியே மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வரும் நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளன.தற்போது மேல்நிலை பள்ளி மாணவர்கள் அந்த ஆபத்தான நிலையிலும் கூட பள்ளியில்செய்முறை தேர்வுகள் எழுதி கொண்டு தான் உள்ளனர் .மேலும் பள்ளி அருகில் இரயில்வே தண்டவாளப் பாதை உள்ளதால் இரயில்கள் செல்லும் போது அதிா்வில் பள்ளிக்கட்டிடத்தில் உள்ள பழமையான ஓடுகளும் அதிா்ந்து கீழே விழ வாய்ப்புள்ளது.அதிா்வில் பள்ளி சுவாில் விாிசல் ஏற்ப்பட்டு கீழே விழ வாய்ப்புள்ளது.கிட்டத்தட்ட நுாற்றாண்டைத் தொடப் போகும் இந்தப் பழமையான பள்ளியை பழமை மாறாமல் புணரமைத்து வருங்கால சந்ததியினருக்கு மேற்கோள் காட்டும் வகையில் பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

இந்த பழமை மிக்க பள்ளியை மீட்டெடுத்து மாணவர்கள் நலனுக்காக அரசும் மதுரை மாவட்ட ஆட்சியர்ரும் இணைந்து புதுபித்து மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம் மற்றும் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் குழு சாா்பில் பொன்.மணிகண்டன் மற்றும் சௌந்திரபாண்டி ஆகியோா் கோாிக்கை விடுத்துள்ளனா்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..