Home செய்திகள் புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரியில் கணித திறன் போட்டிகள் பிப்ரவரி 26ல் நடைபெறுகிறது.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரியில் கணித திறன் போட்டிகள் பிப்ரவரி 26ல் நடைபெறுகிறது.

by mohan

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரியில் கணித முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பாக மாநில அளவிலான கல்லுரிகளுக்கு இடையில் கணித திறன் போட்டிகள் பிப்ரவரி 26ம் தேதி நடைபெறுகிறது.கணிதவியல் ஒளிபட விளக்க காட்சி( power point presentation),கணித வினாடி வினா( math quiz),கணித அதிசயம்(math wonder), மனக் கணிதம்(math mind), கணிதத்தின் ஜாம்பவான்(big boss of math), கோலத்தில் கணிதம்(rangoli) மொத்தம் ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.அனைத்து போட்டிகளும் சிறந்து விளங்கும் கல்லுரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து கல்லுரி மாணவர்களும் பங்கு பெற்று தங்கள் திறமையை வெளிப்படுத்து மாறு கல்லுரி முதல்வர் பொன் பெரியசாமி கேட்டுக்கொள்கிறார்.

செய்தி:இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!