Home செய்திகள்உலக செய்திகள் உயிரி போர் நடத்த திட்டம் தீட்டியதா சீன அரசு? – கொரோனா வைரஸ் பற்றி கணித்த அமெரிக்க நாவலாசிரியர்.

உயிரி போர் நடத்த திட்டம் தீட்டியதா சீன அரசு? – கொரோனா வைரஸ் பற்றி கணித்த அமெரிக்க நாவலாசிரியர்.

by mohan

சீன நாட்டின் வளர்ச்சியும், உற்பத்தியும் எந்த அளவுக்கு உலக அளவில் வியப்பை ஏற்படுத்தி வருகிறதோ அதே அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய இந்த வைரஸ் தொற்றால் இதுவரையில் 2000க்கும் மேலானோர் உயிரிழந்திருக்கின்றனர். 70 ஆயிரத்துக்கும் மேலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், இனி ஏற்படாமல் தடுப்பதற்கும் மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் சீன அரசு செய்வதறியாது தவித்து வருகிறது. இதற்கிடையே, சர்வதேச மருத்துவ அவசர நிலையை அறிவித்து உலக நாடுகள் அனைத்தையும் உஷார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து கடந்த வாரம் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்ட உலக சுகாதார மையம், இந்த கொரோனா வைரஸுக்கு COVID-19 என புதுப் பெயரை அறிவித்தது.

அதில், CO-Corona, VI-Virus, D-Disease என்றும் 2019ல் வைரஸ் தொற்று பரவியதால் 19 என குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்படி இருக்கையில், 1981ம் ஆண்டு வெளியான The Eyes of Darkness என்ற திகில் நாவலில் தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா(கோவிட்) நோய் தொற்று குறித்து குறிப்பிடப்பட்டது.டீன் கூன்ட்ஸ் என்பவர் எழுதிய இந்த நாவலில், போர் மூளும் போது உயிரி ஆயுதம் பயன்படுத்துவதற்காக சீன ராணுவ ஆய்வகம் வூஹான்-400 என்ற உயிர் கொல்லியை உருவாக்கியுள்ளது. அது தவறுதலாக வெளியே பரவி மனிதர்களை மட்டுமே பாதிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது போலவே தற்போது சீனாவின் வூஹான் நகரில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 (கொரோனா வைரஸ்) ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் டீன் கூன்ட்ஸ் எழுதிய நாவலில் குறிப்பிட்டதை போல ஒத்துப் போவதால் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.குண்டு சத்தமின்றி வெறும் உயிரி தாக்குதல் மூலம் பிற நாட்டை அழிப்பதற்கான ஆராய்ச்சி அது. சுருக்கமாக சொல்வதென்றால் ‘தசாவதாரம்’ படத்தில் குப்பியை சாப்பிட்டவுடன் வளர்ப்பு குரங்கு கரையுமே அது தான்.

மேலும், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்பே கணித்து எழுதியிருப்பதாக டீன் கூன்ட்ஸை மக்கள் பாராட்டியும் வருகின்றனர்.உலகம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.தன்வினை தன்னைச்சுட்டது.சீனாவில் துவங்கி உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக சீனாவின் உயிரி ஆயுத ஆய்வகமே காரணம் என்ற தகவல் பரவி வருகிறது.இது முக்கியமாக இந்திய ராணுவத்தை குறி வைத்து தான் தொடங்க பட்டதா? பிரச்சனையில் இந்தியாவிடம் பின் வாங்கிய பிறகு இந்தியா மீது கடும் வன்மமாக இருக்கிறது சீனா.

ஏற்கனவே சீனா மீது உலக நாடுகளுக்கு சந்தேகம் உண்டு. வூகான் ஆய்வு மையம் பற்றிய கேள்வி எழும்போதெல்லாம், ‘அது உயிரி ஆயுத ஆய்வகம் அல்ல, உயிர்க்கொல்லி நோய் தடுப்பு மருந்து ஆய்வகம்’ என சீனா பதிலளித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.ஏற்கனவே சார்ஸ், எபோலா வைரஸ்கள் பரவிய போதும் சீனா மீது சில நாடுகள் சந்தேகம் தெரிவித்தன. ஆனால் தனக்கு இருக்கும் மிருக பலத்தால் அனைத்தையும் சீனா முனை மழுங்கச் செய்தது.

ஆனால் இப்போது நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதால் விஷயத்தை கசிய விடுகிறது. யாராவது இதற்கு தடுப்பு மருந்து கண்டு புடித்து விட மாட்டார்களா என்று ஏங்கி தவிக்கிறது சீனா அதனால் தான் விஷயத்தை கசிய விடுகிறது.கொரோனா தன் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்றால் உலகத்தில் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் ,‛கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 9 நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்தோம் . அதில் வவ்வால்களின் மரபணுக்கள் வைரசின் மரபணுவும் ஒன்றாக உள்ளது என சீன ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர்.மனித குல வரலாற்றில் சக மனிதனை அழிக்கும் யுக்தியை மனிதன் வளர்த்து கொண்டான். விளைவு மனித குலத்துக்குத்தான் அழிவு.இனி வடகொரியா என்ன வச்சிருக்கான் என்று தெரியவில்லை அதனால் உலகம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை…

தகவல்: இரமேஷ், இயற்பியல் பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!