Home செய்திகள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 148 வது பிறந்தநாள் விழா : வ.வு. சி. சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 148 வது பிறந்தநாள் விழா : வ.வு. சி. சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை

by mohan

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக,அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 148வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மாலை வஉசி சிலைக்கு அணிவித்தார். இதில், பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் ஆறுமுகம், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன்,துணை அமைப்பாளர் பிரதீப், வழக்கறிஞர் ஆனந்த கபேரியல், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ ஆறுமுகநயினார் தலைமையில் அதிமுகவினர் வ.உ.சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, முன்னாள் நகரமன்ற தலைவர் மனோஜ்குமார், நகர சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அதிமுக அமைப்புச் செயலாளர் சித.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வ.வு.சிதம்பரனார் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால, அதிமுக நிர்வாகிகள் கேடிசி சங்கர், அந்தோணி, மில்லர்புரம் ராஜா, சகாயராஜ்,அன்புலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ் முரளி தரன் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் டேவிட் பிரபாகரன், கோபால்,அருள்வளன், ஏசுதாஸ், சம்சுதீன், ஐஸ்வர்யா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில துணைத் தலைவர் எம்ஆர் காந்தி மாலை அணிவித்தார். இதில்,மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், நிர்வாகிகள் விஎஸ்ஆர் பிரபு, இசக்கிமுத்து, சிவராமன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் கிழக்குப் பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் கிழக்குப் பகுதிச் செயலளார் எட்வின் பாண்யன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதிலும் அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!