Home செய்திகள்உலக செய்திகள் சூரியனைவிட 1000 மடங்கு பெரிய நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும்.

சூரியனைவிட 1000 மடங்கு பெரிய நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும்.

by mohan

வானில் மிகவும் பிரகாசமான 12-வது நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.வானத்தில் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்று மங்கலாகி வருகிறது. ஓரியன் விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிவப்பு நிற நட்சத்திரமான பெட்டல்ஜியூஸ், சூப்பர்நோவாவுக்கு முந்தைய கட்டத்திற்குள் நுழைந்து உள்ளது.சிலியில் உள்ள செரோ பரனலில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி (வி.எல்.டி) ஐப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட கண்கவர் புதிய படங்களில் சிவப்பு சூப்பர்ஜெயண்ட் நட்சத்திரமான பெட்டல்ஜியூஸ் மங்கலாக இல்லை, ஆனால் வடிவத்தை மாற்றக்கூடும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

கடந்த சில மாதங்களாக வானில் பெட்டல்ஜியூஸ் பிரகாசமான நட்சத்திரங்கள் பட்டியலில் 12-வது இடத்தில் இருந்து 20-வது இடத்திற்கு சென்றுள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் இருந்து மங்கலாகி வருகிறது. இப்போது அதன் இயல்பான பிரகாசத்தில் வெறும் 36 சதவீதம் மட்டுமே உள்ளது. பூமியிலிருந்து 642.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த நட்சத்திரம். விரைவில் வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் அவ்வாறு வெடித்தால் மனிதர்கள் கவனிக்கும் மிக நெருக்கமான சூப்பர்நோவாவாக இருக்கலாம். ஒரு சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரம் ‘இறக்கும் போது ஏற்படும் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திர வெடிப்பு ஆகும்.வில்லனோவா பல்கலைக்கழக மூத்த வானியலாளரான எட்வர்ட் கினன் சேகரித்த தகவல்களின் படி, 430 நாள் துடிப்பு காலத்தின் மத்தியில் பெட்டல்ஜியூஸ் இருக்கக்கூடும். அது உண்மை என்றால், மிகவும் அசாதாரணமான ஒன்று நடக்கும்.

சூரியனை விட ஆயிரம் மடங்கு பெரியதாக இருக்கும் பெட்டல்ஜியூஸ் சூப்பர்நோவாவிற்குச் சென்றால், வெடிப்பு மிகவும் பிரகாசமாக இருக்கும், அது பகலில் காணப்படலாம். வரவிருக்கும் வாரங்களில், வானியலாளர்கள் பெட்டல்ஜியூஸ் வெடிக்கிறதா என்று உன்னிப்பாக கவனித்து வருவார்கள்.வானில் மிகவும் பிரகாசமான 12-வது நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

தகவல்: இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!