ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா ஆட்சியர் ஆய்வு

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பது தொடா்பான அரசாணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டணம்காத்தான் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைவதற்கான 22 ஏக்கா் நிலம் இடம் தோ்வு செய்யப்பட்டது. புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.345 கோடி செலவிடப்படவுள்ளது. பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகே 22 ஏக்கரில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிக்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மார்ச் ஒன்றாம் தேதி நாட்டவுள்ளார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற் உள்ளனர். அடிக்கல் நாட்டல் அமைவிடம், முதல்வர் வரும் பாதை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர்சி.முத்துமாரி, சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் எம்.பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள்டாக்டர் எம்.மணிகண்டன்(ராமநாதபுரம்),கருணாஸ் (திருவாடானை), சதன் பிரபாகர் (பரமக்குடி), வட்டாட்சியர் வி. முருகவேல், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, பொதுப்பணி துறை கோட்ட பொறியாளர் குருதி வேல்மாறன், செயற்பொறியாளர் ஜெயதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..