கீழக்கரையில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்ட மசோதவை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம்..

இந்தியா முழுவதும் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா மற்றும் குடியுரிமை பதிவேடு சட்டங்களுக்கு எதிராக பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதே சமயம் கடந்த வெள்ளி அன்று வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

இன்று 17:02:2020 கீழக்கரை செய்யது ஹமீதாகலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள் இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தன் எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்கள். இராமநாதபுரம் மாவட்டம் ஏடிஎஸ்பி மட்டும் கீழக்கரை டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..