இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக கிராமங்களில் ஒரு நாள்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரம் ஒன்றிய அளவிலான தன்னார்வலர்கள் அறிமுக கூட்டம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா  கலையனூர் கிராமத்தில் நடைபெற்றது.மக்கள் பாதை கலையனூர் தன்னார்வலர் நந்தினி வரவேற்றார்.இராமநாதபுரம் ஒன்றிய மக்கள் பாதை பொறுப்பாளர்கள் இராமு, தினேஷ் ஆகியோர் தலைமை தாங்கி சிறப்பித்தனர்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமீன் மக்கள் பாதை திட்ட விளக்கங்கள் பற்றியும், சரவணக்குமார் கிராம சபை பற்றியும், கிளாட்வின் சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும் எடுத்துரைத்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் சந்திரசேகர், சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது , பார்கவி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் வீரக்குமார், தேவிபட்டினம் ஊராட்சி பொறுப்பாளர் உலகு ராஜ் சிறப்புரை ஆற்றினார்கள்.மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ராமு, இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, தங்கச்சிமடம் பொறுப்பாளர் தீனா மற்றும் இளைஞர்கள்,பொதுமக்கள், மக்கள் பாதை தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் இறுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளி மாணவர் மூவேந்தன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் மொழியைப்பற்றியும் தமிழ் நூல்கள் பற்றியும் எடுத்துரைத்து சிறப்பித்தார்.மக்கள் பாதை தோழர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக விருந்து கொடுத்து உபசரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கலையனூர் மக்கள் பாதை தன்னார்வலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..