கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி

மதுரை மாவட்டம் மதுரை பழங்காநத்தம் கீழத்தெரு சேர்ந்த அய்யாவும் மகன் கணேசன்  35 . மாலை மாடக்குளம் கம்மாயில் குளிக்க சென்றுள்ளார் .அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சென்றதால்   பொதுமக்கள் மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. உடனடியாக மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறைக்கும் மற்றும் மதுரை டவுன் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீவிர தேடுதல் இறங்கிய தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். இதுகுறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் இந்த கம்மாயில் இந்த மாதத்திலேயே 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..