சாலையை ஆக்கிரமித்து மணல் செங்கல் வியாபாரம். மணல் காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு நேருநகர் நேதாஜி மெயின் ரோட்டில் பழைய கருப்புசாமி கோவில் அருகே சாலையில் மணல் ஜல்லி மற்றும் சங்கலை கொட்டி வியாபாரம் செய்கிறார்கள். அப்பொழுது மணல் காற்றில் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கண்கள் மீது விழுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் ஜல்லியை நடு சாலையில் கொட்டி உள்ளதால் ஜல்லி மீது ஏறி கீழே விழும் அபாயமும் ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பைபாஸ் சாலையில் பல பகுதிகளில் சாலையை பல கடைகள் ஆக்கிரமித்துள்ளனர். இதை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது .விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..