மதுரை அழகப்பன் நகர் சாலையில் உள்ள ரயில்வேகேட் சந்திப்பில் 70 வயது முதியவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் வாசகம். இவருக்கு வயது 70. இவர் குடும்ப சண்டை காரணமாக கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் . காலை .அழகப்பன் நகர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் குருவாயூர் முதல் சென்னை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளம் முன்பு தற்கொலை செய்வதற்காக ரயில் முன்பு படுத்துள்ளார்.  ரயில் தாக்கி விபத்தில் சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட முதியவர் வாசகம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி மதுரை ரயில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். ரயில்வே காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..