6-ஆவது இன்சைட் கார் ரேலி

மதுரை லேடிஸ் சர்க்கிள் 8 மற்றும் இந்தியன் அசோசியேசன் ஆப் பிளைன்ட் (IAB) இணைந்து நடத்திய 6-ஆவது இன்சைட் கார் ரேலி 16-ம் தேதி (ஞாயிறு) பாண்டியன் ஹோட்டலிலிருந்து துவங்கியது.ARC குரூப் ஆப் கம்பெனிஸ் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர் இந்த ரேலியை ARC குரூப் ஆப் கம்பெனிஸ் இயக்குநர் M. ரகுராம் லேடிஸ் சர்க்கிள் இந்திய அமைப்பின் பிரசிடெண்ட்  நிதிகுப்தா மற்றும் மதுரை ARC நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சோனி ரெங்கராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மதுரை லேடிஸ் சர்க்கிள் 8 ன் தலைவர் சுகன்யா ரகுராம், செயலாளர் டாக்டர். வித்யா மற்றும் உறுப்பினர்கள் மீனா, நான்சி,  விசாலாட்சி,  பிரஜிதா, சுபிக்சா,  சிந்து,  அபர்ணா நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

மதுரையில் 49 வருடமாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு இது போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக நிதி திரட்டி அதன் மூலம் மதுரையில் பல பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கழிவறைகள்,நூலகம், சத்துணவுக் கூடங்கள் என நிறுவியுள்ளனர் அதுமட்டுமல்லாது இந்த வருடம் அரவாணிகளின் மேம்பாடு ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வு போன்றவற்றையும் செய்துள்ளனர் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக திரட்டப்படும் நிதியில் ஒரு பாதி கண்பார்வையற்றோர் மேம்பாட்டிற்காக கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..