Home செய்திகள் ஆன்டிபயாடிக்ஸ், விட்டமின் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்..

ஆன்டிபயாடிக்ஸ், விட்டமின் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்..

by Askar

மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஆன்டிபயாடிக்ஸ், விட்டமின் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மருந்துதட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஆன்டிபயாடிக்ஸ், விட்டமின் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவில் மருந்து மூலப் பொருட்கள் விநியோகம் பாதிப்பால், இந்தியாவில் மருந்துப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்தது.

இந்தக் குழு விட்டமின் குளோராம்பெனிகால், நியோமைசின், அசித்ரோமைசின், க்ளிண்டாமைசின், பி1,பி2, பி6, உள்ளிட்ட 12 அத்தியாவசிய மருந்துகளின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவிருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்ட விதிகளை செயல்படுத்த மாநில அரசுகளை வலியுறுத்துமாறும், பதுக்கல்காரர்கள் மற்றும் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்துவோருக்கு எதிராக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரை அரசிடம் நாளை சமர்ப்பிக்கப்படும் என நிபுணர் குழுவில் இடம்பெற்ற அதிகாரி தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!