மண்டபம் யூனியன் கும்பம் அரசு உயர் நிலை பள்ளியில். கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை சார்பில் உங்களால் முடியும் 2020 கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…

மண்டபம் யூனியன் கும்பரம் அரசு உயர் நிலை பள்ளியில். கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை சார்பில் உங்களால் முடியும்2020 என்ற கல்விவழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது,  இந்தநிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார், கும்பரம் கிராம தலைவர்திரு R.முருகேசன், ஊராட்சி மன்ற தலைவ .துளசிதேவி.தலைமை ஆசிரியர் T.காதர் இஸ்மாயில்ஆகியோர்  முன்னியிலை வகித்தனர்.

அகில இந்திய சத்ரியநாடார் சங்க பொதுச்செயலாளர்  பா.காந்திராஜன்வாழ்த்துரை வழங்கினார், மாவட்ட குழந்தைகள் நல தலைவர்திரு S .துரைராஜ்  சிறப்புரை ஆற்றினார். அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர் தரணிமகேந்திரன்  வரவேற்று பேசினார்.

அதைத் தொடர்ந்து  கடுக்காய்வலச தலைமையாசிரியர் Dr.கணேசபாண்டியன் இரெட்டையூரணி தலைமையாசிரியர்  Dr. C. புகழேந்தி இருமேனி அரசினர் மேல்நிலை பள்ளி ஆசிரியர்   Dr.K.கலைராஜு  கும்பரம் அரசினர் உயர் நிலைப்பள்ளி   ஆசிரியர்  வி. சேவியர் ராஜன் ஆகியோர் மாணவர்களுக்குஉயர் கல்வி ஆலோசனைகளை வழங்கினர்

 இந்நிகழ்ச்சியில் இப்பகுதியில் உள்ள சமூகஆர்வலர்கள்,  இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சாதனைபடைத்த மாணவர்களுக்கு, பாராட்டு பத்திரம், கேடயம் வழங்கிகெவுரவிக்கப்பட்டனர், நேசம் அறக்கட்டளையின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு  மரக்கன்று வழங்கப்பட்டதுஅறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள்,மகளிர் அணியினர். அகில இந்திய சத்ரிய நாடார் சங்கநிர்வாகிகள். கும்பரம் கிராம நிர்வாகிகள் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில்கடுக்காய் வலசை. இரெட்டையூரணி. மேதலோடைதாமரைகுளம். கும்பரம்வாணியாங்குளம்சிறுவயல், ஆகிய பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில்அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர் திரு .தங்கராஜ்நன்றி கூறினார்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..