இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் – பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி 25ஆம் ஆண்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி 25 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவிற்கு நிறுவனர் எச்.ஹலிபுல்லா கான் தலைமை வகித்தார். தாளாளர் எச்.பவுசுல் ஹனியா, துணைத்தலைவர் எச்.முகமது ஷராஃபதுல்லாஹ் முன்னிலை வகித்தனர். ஆசிரியை நளினி தேவி வரவேற்றார்.  ஆசிரியை பிரியா ஆண்டறிக்கை வாசித்தார்.

மதுரை காமராஜ் பல்கலை., துணை வேந்தர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசுகையில், . 8 சதவீதமாக இருந்த கல்வி வளர்ச்சி 88 சதவீதமாக உயர காரணமாக இருந்தவர் காமராஜ். இந்தியாவில் உயர்கல்வி கற்போர் 26 விழுக்காடு. தமிழகத்தில் உயர்கல்வி கற்போரின் சதவீதம் 46 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு காமராஜருக்கு பின் வந்த முதல்வர்களே காரணம். இன்றைய வாலிபர்கள இக்கால கலாச்சாரத்தை சீரழிக்கும் சமூக வலை தள ஊடக பயன்பாட்டில் இருந்து வாரத்தில் ஒரு நாளில் மணி நேரம் விலகி பெற்றோர், உறவினர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வோம் என சபதம் எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.

பள்ளி சார்பில் நடந்த  உணவுத் திருவிழாவில் தயாரான பண்டங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த ரூ.ஒரு லட்சம் நிதி மூலம் நதிப்பாலம் இருள் சூழ்ந்த பகுதியில் மின் விளக்கு அமைக்க  மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தத்திடம் வழங்கப்பட்டது. 2019-2020 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலை பள்ளியில் முதல், மூன்று இடம் பிடித்த மாணவியருக்கு தங்க நாணயம் மற்றும் பாராட்டு சான்றிதழை மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் வழங்கி கவுரவித்தார்.

மார்க்க கல்வி போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி நிறுவனர் எச்.ஹலிபுல்லா கானின் கல்விச்சேவைக்கு மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். பள்ளி தலைவர் அன்சாரி,  கல்வி ஆலோசகர் ரியாஸ் அஹமது, ஜமாத் நிர்வாகிகள், பெற்றோர்: மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..