தென்காசி மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு விழா-உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் பங்கேற்பு

தென்காசியில் புதிய முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு விழா நடைபெற்றது.தென்காசி மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலராக கருப்பசாமி 13.02.2020 வியாழக்கிழமை பதவியேற்றார். இவர் முன்னதாக பழனி மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.அன்னாரின் பதவியேற்பு விழா தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சவுந்திர சேகரி, சங்கரன்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் சம்பத்குமார், மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், நெடுவயல் அச்சன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெய பிரகாஷ் ராஜ், தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர் பாண்டியன் அவர்கள், பள்ளி துணை ஆய்வாளர் செய்யது இப்ராஹிம், கண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆரோக்கிய ராசு, ராமர் செய்யது இப்ராஹிம் மூசா , ரமேஷ் அலுவலக கண்காணிப்பாளர் பரமசிவம், தொல்காப்பியன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply