பிப்ரவரி 14-யூடியூப் தொடங்கப்பட்ட தினம் இன்று.

(You Tube) கூகிள் நிறுவனத்தின் இணையவழி நிகழ்படங்கள்(video) வழங்கும் இணையத்தளம் ஆகும்.இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும்.யூடியூபில் கிட்டத்தட்ட 13 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. ஒவ்வொரு நிமிடமும் சராசரியா 300 நிமிடம் நிகழ்படங்கள் பதிவேற்றபடுகின்றன.

பிப்ரவரி 2005-ல் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி , ஸ்டீவ் சென் , ஜாவேத் கரீம் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த இணையதளத்தைத் தொடங்கினர்.சாட் ஹர்லி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் படித்தவர் .ஸ்டீவ் கரீம் மற்றும் ஜாவேத் கரீம் இருவரும் இல்லினோயஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

நவம்பர் 2005க்கும் ஏப்ரல் 2006க்கும் இடையே 11.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸீகியோயியா கேபிடல் நிறுவனம் இதில் முதலீடு செய்தது.தொடங்கியதிலிருந்து ஒரே லோகோவைப் பயன்படுத்திய யூடியூப் அதன் லோகோவை மாற்றியமைத்தது. பார்த்தவுடனேயே வீடியோ பிளேயர் என்பதை உணரும் வகையில் அந்த மாற்றம் இருந்தது. குழந்தைகளுக்காக பிரத்யேகமாக யூடியூப் கிட்ஸ் ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்தாலும், அதை இன்னும் மெருகேற்றினர்.மாணவர்களுக்கு கல்வி யூடியூப் உள்ளது.அனைத்து பல்கலை கழகம் மற்றும் கல்வி நிறுவனம் தனக்கென ஒரு யூடியூப் சேனல் வைத்து உள்ளது.

ஊடகங்கள் நேரத்தை வீணடிக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு மாறாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஊக்கத்தையும் யூடியூப் வழங்கிவருகிறது.உலகளவில் ‘யூ டியூப்’ சேனல் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபர்களின் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயது சிறுவன் தனது யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.184 கோடியே 98 லட்சத்து 55 ஆயிரம்) சம்பாதித்து முதல் இடத்தை பிடித்துள்ளான்.

தகவல்:இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image