மதுரை ரயில்வே மகளிர் நல சங்க பள்ளி 59 ஆம் ஆண்டு விழா..

மதுரை ரயில்வே காலனி தெற்கு ரயில்வே மகளிர் நல சங்க உயர்நிலைப் பள்ளியின் 59 வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் தலைமை தாங்கினார். தெற்கு ரயில்வே மகளிர் நலச்சங்க மதுரை கோட்ட தலைவர் அனிதா லெனின், துணைத் தலைவர்கள் மஞ்சுளா மன்சுகாணி, பிரதீபா ஷாவ் முன்னிலை வகித்தனர். ‌  மகளிர் நலச்சங்க பொருளாளர் கௌரி கிரிதர் லால் வரவேற்றார்.

பள்ளி முதல்வர் ஷா நவாஸ் பானு ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகளுக்கு கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்கள் லலித்குமார் மன்சூகாணி, ஓ.பி.ஷாவ் ஆகியோர் விருது, சான்றிதழ் வழங்கினர். மாணவ, மாணவியரின் வண்ண மிகு கலை நிகழ்ச்சி நடந்தது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply