ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான (திருவாடானை, பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர்) இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ. வீரராகவ ராவ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது . இறுதி வாக்காளர் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 1369 பாகத்தில் 5,67,307 ஆண் வாக்காளர்களும், 5,69,193 பெண் வாக்காளர்களும் 69 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஆக 11,36,569 நபர்கள் வாக்காளர்களாக உள்ளனர் .இதற்கு முன்பு 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி , நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் 5,59,421 ஆண் வாக்காளர்களும் 5,60,959 பெண் வாக்காளர்களும், 70 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஆக 11,20,450 வாக்காளர்களாக இருந்தனர். 23.12.2019 முதல் 22 .01.2020 வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 8,848 ஆண் வாக்காளர்களும், 9,252 பெண் வாக்காளர்களும் 1 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக 18,101 நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இதே காலத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 962 ஆண் வாக்காளர்களும் , 1018 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலின வாக்காளரும் ஆக 1982 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..