பிப்ரவரி 14, 2019 புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த தினம் இன்று.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவப்படையினர் வந்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 துணை ராணுவப்படை வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பிப்ரவரி 14-ம் தேதி 2019 ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதச் செய்து வெடிக்கச் செய்தத்தில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.புல்வாமா தாக்குதல் தொடர்பாக கடந்த ஒருமாதமாக பல்வேறு விசாரணைகளை நடத்திய பாகிஸ்தான் அரசு, தாக்குதல் தொடர்பாக 54 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், அது குறித்த அறிக்கையை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் ” இந்தியா அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் நடத்திய விசாரணையில், 54 பேரை விசாரணை அடிப்படையில் கைது செய்தோம். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களுக்கும் தீவிரவாத தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெரியவந்தது.மேலும், இந்திய அரசு அளித்த ஆதாரங்களில் 22 இடங்களில் தீவிரவாத முகாம்கள் இருப்பதாகக் கூறி இருந்தது. அந்த இடங்களை ஆய்வு செய்தபோது, அவ்வாறு எந்த தீவிரவாத முகாம்களும் செயல்படவில்லை. அங்கு காணப்படவும் இல்லை.

இந்திய அரசு குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து ஆய்வு செய்யவும், பார்வையிடவும் நாங்கள் இந்திய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து வீரர்களையும் வழக்கம் போல விமானத்தில் அனுப்பி இருக்கலாம் ஜம்மு வரை விமானத்திலோ அல்லது குண்டு துளைக்காத வாகனத்திலோ சென்றிருக்கலாம்.நமது இந்தியா நாட்டிற்க்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இன்நாளில் அஞ்சலி செலுத்துவோம்.

தகவல்:இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..