அணைப்பட்டி வைகை ஆற்றில் மணல் திருடிய லாரி பறிமுதல் லாரி உரிமையாளர் உட்பட 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வைகை ஆற்றில் கடந்த சில தினங்களாக மணல் திருடப்படுகிறது என போலீசாருக்கும், வருவாய்த் துறைக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தது. இதனைத்தொடர்ந்துஇரவு நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வைகை ஆற்றில் ஒரு லாரியில் மணலை திருடிக்கொண்டு வந்தது.அப்போது லாரியில் இருந்தவர்கள் திடீரென போலீசை பார்த்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து நிலக்கோட்டை போலீஸ் நிலையம் முன்பு மணலுடன் நிறுத்தினார்கள்.பின்னர் இதுகுறித்து விசாரித்தபோது விளாம்பட்டி சேர்ந்த பாண்டி என்பவர் தான் பெண்சிங்கம் என்ற பெயரில் ஓடும் லாரியின் உரிமையாளர் என விசாரித்தபோது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டி மற்றும் லாரி டிரைவர் உள்பட 2 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply