அந்தணார்முன்னேற்ற கழக மாநில மகளிரணி கூட்டம்……

அந்ததணர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி கூட்டம் சென்னையில் மாநில மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி உமாகணேசன் சாஸ்திரி தலைமையில்..பொதுசெயலாளர் மாங்காடு பாலாஜி ஆத்ரேயா முன்னிலையில் நடைபெற்றது.திருவான்மியூர் மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி கற்பகம் ஐயர் மற்றும் ஸ்ரீமதி ரேவதி சுப்பிரமணியம் ஐயர் மற்றும் மாவட்ட மாநில மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..

மகளிரணிகூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன..

1).பொருளாதாரத்தில் பின்தங்கியவகுப்பினருக்கு 10./.சதவீதஇடஒதுக்கீடு வழங்கிசெயல்படுத்திவரும் மாண்புமிகு பாரதபிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றிதெரிவித்தும் ..

2).பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10./.,இடஒதுக்கீட்டை மாநிலஅரசும் அமல்படுத்தகோரி அந்தணர் முன்னேற்ற கழகம் மாண்புமிகு தமிழக முதல்வர் எடபாடி கே பழனிச்சாமி அவர்களிடம் வைத்த கோரிக்கையை மாநில அமுல்படுத்தகோரியும்..

3).நமது சமுதாயத்திற்கு எதிராக நடைபெறும் லவ்ஜிகாத்(நாடககாதல்)திருமணத்தில் இருந்த நமதுசமுதாயபெண்களை பாதுகாக்க நமது மதகுலபெருமை கலாசாரம்பற்றியும் நமது பெண்கள் நாடககாதல்வலையில் வீழ்ந்துவிடாமல் பாதுகாப்பாக விழிப்போடு எச்சரிக்கையோடு இருக்கவும்..நமது சமுதாயபெண்கள் நமது சமுதாயதினரை மட்டுமேதிருமணம் செய்துகொள்ளவேண்டும்.வைதீகம் புரோகிதம் கோவில்பூஜை செய்யும் இளைஞர்களை (நமதுசமுதாயகடமையாற்றும் இறைதொண்டாற்றும் )இளைஞர்களை திருமணம்செய்துகொள்ளவேண்டும் இது சம்பந்தமாக அந்தணர் முன்னேற்ற கழக மகளிரணி சார்பாக பிராம்மணர் சமுதாயத்தினர் அதிகம்வசிக்ககூடிய கும்பகோணம் திருவரங்கம் திருவானைக்கோவில் சென்னை நங்கநல்லூர் மைலாப்பூர் திருவல்லிகேனி மேற்க்கு மாம்பலம் உள்ளிட்டபகுதிகளில் ஞாயிற்றுகிழமைகளில் பெற்றோர்பெண்களிடம்பேசும்பொருட்டு திண்ணை பிரசாராத்தில் ஈடுபடுவதென்றும்.

4).அந்தணர் சமுதாயத்தினரின் நலம்காக்க சிவாச்சாரியார்.பட்டாச்சாரியார்.வைதீகாள் புரோகிதர் அர்ச்சகர்கள் அந்தண சமையல்கலைஞர்கள் நலம்காக்க அந்தணர் முன்னேற்ற கழகத்தின் பிரதானகோரிக்கையான அந்தணர் நல வாரியம் அமைக்கவேண்டும் என்று முன்னால் முதல்வர் புரட்சிதலைவி ஜெ ஜெயலலிதா அம்மாவிடம் கோரிக்கைவைத்திருந்தோம் நிறைவேற்றிதருவதாக உறுதியளித்திருந்தார்.புரட்சிதலைவியின் வாக்குறிதியை அந்தணர் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் எடபாடி கே பழனிச்சாமி அவர்கள் கனிவோடு பரீசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டிகோரிக்கை..

5).சமூகஊடகங்களில் (முகநூலில் வாட்ஸ்அப் டிவிட்டரில்)பிராம்மணர் சமுதாயத்தைபற்றி அவதூறாகபதிட்டு கேளிகிண்டல்செய்து ஜாதி மத மோதலைதூண்டும்விதமாக செயல்படும் நபர்கள் அமைப்புகள்மீது சைபர்கிரைமில் புகார்அளித்துநடவடிக்கை எடுத்தும்..தொடர்ந்து இச்செயல் நடைபெறுகிறது மேலும் இதுதொடரா வண்ணம் சமூகஊடகத்தில் ஜாதி துவேசத்தில் ஈடுபடுவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்ஆனையர் கவர்னர் தலைமைசெயலாளர் உள்துறைசெயளாளர் நேரிடையாக சந்தித்து கோரிக்கைவைப்பது எனவும்..தொலைகாட்சிகளில் திரைபடங்களில் அந்தணர் சமுதாயத்திரின் நம்பிக்கையை பின்பற்றும் பழக்கவழக்கத்தை பேச்சுமொழிகளை கடவுள்களை அந்தணர் சமுதாயபெண்களை கேளிகிண்டல்செய்து தொடர்ந்து திரைபடங்கள் நிறுத்தபடமத்திய தகவல் தொலைதொடர்பு அமைச்சரிடம் கோரிக்கைவைப்பது எனவும்..(பிச்சைகாரன் மற்றும் A 1 திரைபடத்தில் நம்சமுதாயத்தை கிண்டல்செய்யும் காட்சிகளை நீக்ககடுமையாக போராடியதுஅந்தணர் முன்னேற்ற கழகம்)

5).கோவை குண்டுப்பு சம்பவத்தின் 14. ஆம் ஆண்டு நினைவுதின…புல்வாமா தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானமும்.

6).கோவில் பூஜை கும்பாபிஷேகம் போன்றவற்றில் காலம்காலமாக பின்பற்றபடும் ஆகமவிதிமுறைகளே பின்பற்றபடவேண்டும்.
ஹிந்துவிரோத மாற்றுமத நார்த்திக கும்பலின் அரசியல் சுயலாபத்திற்க்கு மிரட்டலுக்கு அஞ்சாமல் புரட்சிதலைவி அம்மாவின் வழிநடக்கும் மாண்புமிகு முதல்வர் எடபாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிதெரிவித்தும் தீர்மானம்

7)தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் பிராம்மணர்கள் ஒரே குடையின்கீழ் ஒன்றினைந்து அரசியல்அதிகாரம் சமுதாய பாதுகாப்புபெற அந்தணர்கள் அனைவரும் அந்தணர் முன்னேற்ற கழகத்தில் இனைக்க முயற்சிசெய்யவேண்டும்…

8. மகளிர் தொழில் தொடங்குவது,மற்றும் மத்திய மாநில அரசின் மகளிருக்கான சலுகைகளை பற்றிய விழிப்புணர்வு உண்டாக்குதல்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது…

ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம்.மாங்காடு பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர்   உமாகனேசன் சாஸ்த்திரிகள் மகளிரணி செயலாளர் கோவை மணிகண்டசிவாச்சாரியார் பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image