குடியுரிமை சட்டம் குறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மக்கள் மத்தியில் விஷமித்தனமான பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக பாஜக மாவட்ட தலைவர் சுசேந்திரன் குற்றம் சாட்டினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் பாஜக சார்பில் புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 40 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உசிலம்பட்டியில் நடைபெற்றது, இதில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் மற்றும் பிடிஆர் சொக்கநாதன் தலைமையில் நிர்வாகிகள் ராணுவ வீரர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், வீரவணக்கமும் செலுத்தினர். அதனை தொடர்ந்து அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் குடியுரிமை சட்டம் பாஜக மக்கள் நலனுக்காக கொண்டு வந்துள்ளதாகவும், குடியுரிமை சட்டம் குறித்து திமுக மற்றம் அதன் கூட்டணி கட்சியினர் மக்களிடம் விஷமித்தனமான பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை யறிந்து பாஜகவினர் பொதுமக்களிடம் குடியுரிமை சட்டம் குறித்து தெருமுனை பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக பேட்டியில் தெரிவித்தார். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் சொக்கநாதன், முன்னிலை வகித்தார், மற்றும் மாவட்ட நிர்வாகி தெற்கு மண்டல தலைவர், முருகன், வடக்கு மண்டல தலைவர் K.M.சின்னச்சாமி, மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் நல்ல மலை, ரஞ்ஜித், மொக்கராஜ், C.N. நீதி, குருசாமி மற்றும் பாஜக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..