சாத்தான் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின் பிறந்த நாள் விழா..

இராமநாதபுரம், சாத்தன் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 13/02/2020 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்றம் இணைந்து டார்வின் பிறந்த நாள் விழா மற்றும் சார்லஸ் டார்வின் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் தலைமை ஆசிரியர் & நல்லாசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சுவாமிதாஸ் வரவேற்று பேசினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவ, மாணவியர் அனைவருக்கும் பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின் முகமூடி மற்றும் புத்தகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வழங்கப்பட்டது. மாணவர்கள் டார்வின் முகமூடி அணிந்து கருத்தரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கருத்தரங்கில் ஐசக் நியூட்டன் அறிவியல் ஆசிரியர் நிஷா மாணவர்களுக்கு டார்வின் பற்றிய வரலாறு, பரிணாம வளர்ச்சி கொள்கை, டார்வின் பாடல், அவர் எழுதிய புத்தங்கள் பற்றி விளக்கவுரை அளித்தார்.

மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் பரிணாமத்தின் வளர்ச்சி குறித்து பேசுகையில் சார்லஸ் “டார்வின் ஒரு இயற்கைவாதி மற்றும் உயிரியலாளர்”. பார்க்கும் அனைத்து உயிரினங்களும் ஒரு மூதாதையிலிருந்து தோன்றியது என்பதை ஆராய்ந்து அறிந்தவர். இவருடைய பரிணாம தத்துவக் கொள்கை இன்றைக்கும் பரபரப்பான கருத்தாக இருக்கிறது. தற்கால நவீன அறிவியலில் ஜீன்களை பற்றிய ஆய்வுகள் அவரின் கண்டுபிடிப்புகளை உண்மை என நிருபித்து வருகின்றது. என்று கூறினர்.

மனிதப் பரிணாம வளர்ச்சியானது 60 லட்சம் வருடங்களுக்கு முன் ஒரு வாலில்லா குரங்கிலிருந்து மனித பிரிந்து வளர்ந்தது. 25 மில்லியன் வருடங்களுக்கு முன் ஆஸ்ட்டரலோபித்திகாஸ் என்ற நமது மூதாதையர் கிழக்கு ஆப்பிரிக்காவான பிறந்த இடத்தை விட்டு நகர்ந்து ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு பயணித்தது. இதில் ஆசியாப் பக்கம் வந்தவைகள் ஹோமோ எரெடக்டஸ் என்ற பெயரில் ஆதியில் பரிணாமம் அடைந்து பல வகை மனித முன்னோடிகள் உருவாக்கி இருக்கிறது. ஹோமோ ஏரெக்டஸ் 20 லட்சம் வருடங்கள் வாழ்ந்து இருக்கிறது என்பது மிக்பெரிய ஆச்சர்யம். ஹோமோ எரெக்டஸ் இருந்து தான் நியாண்டர்தால், ஜாவா மனிதன், புளோரஸ் என்ற லில்லிபுட் மனிதர்கள் (3 அடி மனிதர்கள்- 25 கிலோ). இது போன்ற பல மனித முன்னோடிகள் தோன்றி அழிந்து உள்ளனர்.

மனிதனின் தொட்டில் ஆன கிழக்கு ஆபிரிக்காவில் பரிணாமம் தொடர்ந்து. ஹோமோ எர்காஸ்ட்டார், ஹோமோ செப்பியன்ஸ் என நவீன மனிதன் பரிணமித்தான். இருபது லட்சம் வருடத்தில் இருத்து சமீபத்திய பத்தாயிரம் வருடத்திற்கு முன் வரை பல்வேறு மனித இனம் வாழ்ந்து இருக்கிறது. தற்போது வாழும் மனிதன் சுமார் 2லட்சம் வருடத்தில் இருது வருகிறான்.

சுமார் 70 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மனித இனத்தின் கலாச்சாரப் பரிணாமம் துவங்கியது. 12000 வருடங்களுக்கு முன் விவசாயம் சுமார் 500 வருடங்களுக்கு முன் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி என மனித சமூகம் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிகளோடு பல கோடி உயிரினங்கலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று கூறினர்.

ஆசிரியர்கள் சாம்ராஜ், ரேவதி, ரீனா தாஸ், திருமூர்த்தி, லதா சோமு மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிறைவாக, ஆசிரியர் கதிர்மணி நன்றி கூறினார். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் மற்றும் தலைமை ஆசிரியர் செல்வராஜ் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..