Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்க முதலாம் ஆண்டு விழா…

இராமநாதபுரம் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்க முதலாம் ஆண்டு விழா…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்க முதலாம் ஆண்டு விழா தாலுகா யாதவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில கிராமிய மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, நிர்வாகக்குழு மாநிலத் தலைவர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பொதுக்குழு உறுப்பினர் கலைமாமணி முனைவர் தி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் கலைமாமணி ச.சமுத்திரம், மாநில மகளிரணி செயலாளர் கலைமாமணி டி.லெட்சுமி, மாநில பொருளாளர் கலைச்சுடர் மணி சா.முனியசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கலைச்சுடர் மணி பி. மருங்கன் வரவேற்றார்.

மூத்த கலைஞர்கள் சேதுநகர் ஆர்.பாலையா (தவில்), ஏ.ஜீவராஜ் (நாதஸ்வரம்), உச்சிப் புளி க.சின்னத்தம்பி (தவில்), மு.சுப்ரமணி (தவில்), சத்திரக்குடி வி செல்லத்துரை (நாதஸ்வரம்), ஏ.கோவிந்தராஜ் (நாதஸ்வரம்), பாண்டியூர் அ.கணேசன் (நாதஸ்வரம்), வெ.அமிர்தலிங்கம் (நாதஸ்வரம்), எமனேஸ்வரம் பி.ஏசையா (நாதஸ்வரம்), அழகு(தவில்), பார்த்திபனார் வி.அரிய முத்து(தவில்), நந்தன் (நாதஸ்வரம்), அபிராமம் ராஜமாணிக்கம் (தவில்), மாரிமுத்து(நாதஸ்வரம்), கடலாடி பி.முத்து(நாதஸ்வரம்), காளிமுத்து(தவில்), கமுதி ஜெயபால் (நாதஸ்வரம்), ஆரோக்கியம் (தவில்), தொண்டி அ.மாரி (பம்பை), பாலு (தவில்), திருவாடானை என். மலைக் கண்ணன் (நாதஸ்வரம்), ஏ.காளிமுத்து( கிராமிய நடிகர்), குலமாணிக்கம் கோட்டையன் (தவில்), நல்லு (தவில்), பழைய தேர்போகி ஏ.கணேசன் (நாதஸ்வரம்), எம்.பிரான்சிஸ் (நாதஸ்வரம்), அழகன்குளம் கோவிந்தன் (தவில்), கணேசன் (தவில்), தேவிபட்டினம் கா.கோவிந்தன் (தவில்), சி.பன்னீர் செல்வம்(நாதஸ்வரம்), களரி கா. கருப்பையா (தவில்), மு.ராசு (நாதஸ்வரம்), பாண்டு குடி- ஆலம்பாடி முருகதாஸ் (நாதஸ்வரம்), மாரிமுத்து(நாதஸ்வரம்), பூசேரி கருப்பையா (நாதஸ்வரம்), சாத்தையா (நாதஸ்வரம்) ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன், ராமநாதபுரம் தாசில்தார் வி. முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் டாக்டர்.கரு.வசந்தகுமார் நன்றி கூறினார்.

இராமநாதபுரம் கிராமியக் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவிடம் முன் வைத்த கோரிக்கைகள்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு இன்நி வசிக்கும் கிராமிய கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கிராமியக் கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய தொழிற்கடன்  வங்கி மூலம் வழங்க வேண்டும், தாட்கோ திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கிராமியக் கலைஞர்களுக்கு இசை கருவிகள், கலை பொருட்கள் வழங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க வேண்டும், மாவட்ட அளவில் வழங்கப்படும் கலை விருதுகளில் கிராமிய கலைஞர்களுக்கு அதிக விருதுகள் வழங்க வேண்டும், மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்த கிராமியக் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும், அரசு தாட்கோ திட்டத்தில் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் கிராமியக் கலைஞர்களுக்கு இலவச இசை கருவிகள் மற்றும் கலைப் பொருட்கள் வழங்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் உறுப்பினராக உள்ள 20 கிளைச் சங்கங்களை உட்கொண்டு மாவட்ட தலைமை சங்கமாக செயல்பட்டு வரும் ராமநாதபுரம் மாவட்ட கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு கலைஞர்கள் கூடுவதற்கும் , கலைப்பயிற்சி எடுக்க ராமநாதபுரத்தில் 10 சென்ட் இடம் இலவசமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!