6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு…! ஸ்டார் ஓட்டலை மிஞ்சிய திட்டம் : ஜெகன்மோகனை கொண்டாடும் மாணவர்கள்..!

ஆந்திரா : பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு விதமான உணவுகள் வழங்கப்பட்டு வருவது ஆந்திராவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது, 6 நாட்களுக்கு 6 விதமான உணவுகள் வழங்கப்படும் என தற்போதைய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது, இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிழமை வரிசையில் வழங்கப்படும் சத்துணவு விபரங்கள் :

திங்கட்கிழமை : சாதம்‌, பருப்புகுழம்பு, முட்டைக்‌ கறி, வேர்க்கடலை பர்பி

செவ்வாய்க்கிழமை : புளியோதரை, தக்காளி பருப்பு சாதம்‌, அவித்த முட்டை.

புதன்கிழமை : பிஸ்மில்லாபாத்‌, ஆலுகுருமா, வேகவைத்த முட்டை, வேர்க்கடலை பர்பி.

வியாழக்கிழமை : பயித்தம்‌ பருப்பு சாதம்‌, தக்காளி சட்னி, முட்டை

வெள்ளிக்கிழமை : சாதம்‌, கீரை பருப்பு. முட்டை. வேர்க்கடலை பர்பி

சனிக்கிழமை : சாதம்‌ சாம்பார்‌. சுவிட்‌ பொங்கல்

இந்த நிலையில், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, நகரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்த ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து அவர் உணவும் உட்கொண்டார்.அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒரே மாதிரியான உணவை உண்டு பள்ளி மாணவர்களுக்கு சளிப்பு ஏற்படாமல் இருக்க, ஜெகன்மோகன்ரெட்டி அவரே இந்த மெனுவை தயாரித்துள்ளார்,” என்றார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image