நிலக்கோட்டை – வத்தலக்குண்டு தார்சாலை அமைக்கும் பணி தரமற்றதாக அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மதுரை பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள நிலக்கோட்டை – வத்தலக்குண்டு சாலை கடந்த இரண்டு மாதங்களாக சுமார் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இந்த சாலை அகலப்படுத்தும் பணியில் இருபுறங்களிலும் சுமார் மூன்று அடி அளவுக்கு சாலை தோண்டப்பட்டு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. அதனை ஏற்கனவே மற்றும் பெரிய ஜல்லி கற்கள் , சிமெண்டு, கிரஷர் மண் கலந்து சாலையை அகலப்படுத்தி னார்கள். இந்தச் சாலையில் நிலக்கோட்டை அருகே உள்ள மணியகாரன்பட்டி கருப்புசாமி கோவில் பகுதியில் ஒரு பாலம் கட்டுவதற்காக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது கிரசர் மண்ணையும் இனியும் போட்டு தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் இதை கடப்பதற்குள் பல்வேறு வகைகள் வாகன ஓட்டிகள் தூசி பறப்பதால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க கடந்த இரண்டு தினங்களாக அந்தப் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்படித் தார்ச்சாலை அமைப்பதில் தரமில்லாத முறையில் அமைக்கப்படுவதால் கற்கள் பெயர்ந்து சாலையோரம் கற்களாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து சிறுசிறு காயங்களோடு செல்கிறார்கள். எனவே இது சம்பந்தமாக உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்வாரா? என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதுபோன்ற நிலை நீடித்தால் தொடர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

நிலக்கோட்டை தாலுகா  செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..