கமுதி கடைகளில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அங்குள்ள டீ ஸ்டால்கள், பலகார கடைகள், பேக்கரிகள், மளிகை, ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், காகித குவளைகள், காகிதப் பைகள் மற்றும் உறைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் 2019 ஜனவரி 1 முதல் பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதையடுத்து, ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தல் படி, சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ரா.ராஜா ஆலோசனை படி செயல் அலுவலர் ஆர்.இளவரசி வழிகாட்டுதல்படி பேரூராட்சி வரி தண்டலர் எம்.ஏ.குமார், இளநிலை உதவியாளர் பாரதி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பயன்பாட்டிற்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல், அபராதம் விதித்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image