ஆம் ஆத்மி அபாரம்- மீண்டும் டெல்லி முதல்வராகும் கெஜ்ரிவால்.!

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவித்தது. அதன்படி, டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 8ம் தேதி நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரையில் நீடித்தது. 24 மணி நேரத்தை கடந்த பின்னர் தேர்தல் ஆணையம் சுமார் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தது. இங்கு 1.47 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 62.59-ஆக அமைந்துள்ளது. கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தேர்தலுக்காக மொத்தம் 2,700 மையங்கள் மற்றும் 13 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கைக்காக 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1.47 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 62.59-ஆக அமைந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்கும் என தெரிகிறது. பாஜகவுக்கு 2-வது இடம் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..