மாரண்டஹள்ளியில் 4லட்சம் ரூபாய் புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது. வாகனம் பறிமுதல்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த  மாரண்டஹள்ளி வழியாகதடை செய்யப்பட்ட குட்கா பொருள் கடத்துவதாக மாரண்டஹள்ளி  காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர்  பஞ்சப்பள்ளி 4ரோடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது மைசூர் பகுதியில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி காப்புகாடு செக்பேஸ்ட்டை கடந்து மாரண்டஅள்ளி வழியாக ஓமலூர் பகுதிக்கு மினி லாரியில் பால்வண்டி என குறிப்பிட்டு பால் எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். சந்தேகமடைந்த காவல்துறையினர் சோதனை செய்தனர் சோதனையில் 2 டன் பான் மசாலா குட்கா புகையிலை இருந்ததைக் கண்டறிந்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா குட்கா, ஜெர்தா வின்  மதிப்பு 4 லட்சம் என மதிப்பிட்டுள்ளனர். வாகனத்தில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த கதம் சிங்(20) மற்றும் நர்பர்சிங் (28) என்ற இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட  பொருட்கள் மாரண்டஅள்ளி பாலக்கோடு பகுதிகளில் பல ஆண்டு காலமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது பான்மசாலா கடத்தி வந்த வாகனத்தின் பதிவு எண் எதுவும் இல்லாமல் வாகனத்தை இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் இவர்கள் இருவருடன் மாரண்டஹள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்து பாலக்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் வாகனத்தின் உரிமையாளர் மர்ஜித்சிங் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..