Home செய்திகள் அகில இந்திய வானொலியின் ஒரு மணி துளி போட்டி

அகில இந்திய வானொலியின் ஒரு மணி துளி போட்டி

by mohan

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அகில இந்திய மதுரை வானொலியின் ஒரு மணித்துளி ஆளுமை வளர்ச்சிக்கான போட்டி ஒலிப்பதிவு செய்யப்பட்டது.மாணவர்களின் ஆளுமை திறனை அதிகமாக வளர்க்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள மதுரை வானொலியின் ஒரு மணி துளி நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார் . பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .மதுரை வானொலியில் நிகழ்ச்சி பொறுப்பாளர் ராஜாராம் என்ற சவித்ரா போட்டியை முழுமையாக நடத்தி ஒலிப்பதிவு செய்தார். வானொலி நிலைய உதவியாளர் ஜெயச்சந்திரன் ஒலிப்பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மாணவர்கள் ஆர்வமுடன் இப்போட்டியில் பங்கேற்றனர் . மாணவர்களின் பேச்சாற்றல், கூர்ந்து கவனிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல் ,கடைசிவரை வாய்ப்புக்கும் வெற்றிக்கும் போராடும் விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போட்டியே ஒரு மணித்துளி போட்டியாகும். காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த போட்டி மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது .போட்டியின் முடிவில் எட்டாம் வகுப்பு மாணவர் ஐயப்பன் முதல் பரிசாக ரூபாய் ஆயிரமும், இரண்டாம் பரிசான ரூபாய் 300யை ஏழாம் வகுப்பு மாணவி கீர்த்தியாவும் ,மூன்றாம் பரிசான ரூபாய் 200யை ஆறாம் வகுப்பு மாணவி நதியாவும் பெற்றனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சி விரைவில் மதுரை மற்றும் கொடைக்கானல் பண்பலை வானொலியில் தொடர்ந்து பல வாரங்கள் ஒலிபரப்பாக உள்ளது.தமிழக அளவில் நடுநிலைப் பள்ளியில் இந்நிகழ்வு இப்பள்ளியில்தான் முதலாவதாக ஒலிப்பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!