Home செய்திகள் அலங்கு என்னும் எறும்பு தின்னிகள் தான் கொரோனா வைரசுக்கு காரணம்: சீன விஞ்ஞானிகள் தகவல்

அலங்கு என்னும் எறும்பு தின்னிகள் தான் கொரோனா வைரசுக்கு காரணம்: சீன விஞ்ஞானிகள் தகவல்

by mohan

சீனாவில் கடந்த மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் பரவியுள்ள இந்த நோயின் காரணமாக 34,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனெனில் இதுவரை வைரசுக்கு காரணமாக வவ்வால்கள் மற்றும் பாம்புகள் என கருதப்பட்ட நிலையில், தற்போது அலங்கு எனப்படும் எறும்பு தின்னிகளிடமிருந்து பரவிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனர்களின் உணவு பொருட்களில் ஒன்றான அலங்கு எறும்பின் செதில்கள் மருத்துவ குணம் கொண்டதாகவும், கலை பொருட்கள் செய்வதற்கும் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. எறும்பின் செதில்களை மூடநம்பிக்கையின் பேரில் அவர்கள் அதிகம் வாங்கிச் செல்வது வழக்கம்.

தற்போது, நடத்தப்பட்ட ஆய்வில் அலங்குவின் உடலில் உள்ள கிருமிகள் கொரோனா வைரசுடன் 99 சதவீதம் ஒத்து போவதாகவும் தென்சீன பகுதியில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சீனாவுக்கு சென்றுவந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பலை ஜப்பான் தனது பகுதிக்குள் அனுமதிக்காததால், கப்பலில் மொத்தம் 3,717 பேர் யோகோஹாமா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் 61 பேருக்கு கொரோனா வைரசு தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போல் ‘வேல்ர்ட் ட்ரீம்’ என்ற சொகுசு கப்பலில் வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையே சீனாவிலிருந்து வரும் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது.

தொடர்ந்து, தனது குடிமக்களுக்கு, சீனாவிற்கு செல்ல தடைவிதித்ததுடன், தடையை மீறி ஏதேனும் அதிகாரிகளிடம் சிக்கினால் அவர்களுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படுமென்றும் சவுதி அரேபிய குடிஉரிமைத்துரை எச்சரித்துள்ளது. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கும், அதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை சார்பில், இந்திய மதிப்பில் 700 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ள நிலையில், அமெரிக்காவும் அதே அளவு பணத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பலகோடி மக்களின் உயிரை பறிக்கும் கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருப்பது அலங்கு எனப்படும் எறும்பு தின்னிகள் தான், என சீன விஞ்ஞானிகள் தனது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

செய்தி:. இரமேஷ், நேரு நினைவு கல்லுரி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!