திருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தங்கள் கண்டுபிடிப்புகளை தேசிய அளவில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வத்துடன் ஈடுபட ஊக்கப்படுத்தி வருகிறது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், விஜயநகரம் அருகில் ராஜம் என்ற ஊரில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 14 வது தொழில்நுட்ப கண்காட்சி STEPCONE 2020 பெயரில் ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 ஆகிய 3 நாள் ஏற்பாடு செய்து நாட்டில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி விளக்கம் அளிக்க அறிவிப்பு செய்திருந்தது. இந்த கண்காட்சியில் திருச்சி நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் மாணவர்கள் ஜீவிதா, அகிலா, கற்பகம், முரளி, கோபிநாத் மற்றும் வழிகாட்டுதல் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் பங்கேற்றனர்.இதில் ஜுவிதா இயந்திரங்களில் வீணாகும் வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையும், அகிலா பகலில் உற்பத்தியாகும் சூரிய மின்னாற்றலை ஹைட்ராலிக் அழுத்தம் மூலம் சேமித்து மீண்டும் உபயோகிக்கும் முறையையும், கற்பகம் பார்வையற்றோர் உணரும் தொடு உணர்வு கருவியை செயல்படும் விதம் குறித்தும், முரளி கடல் நீரை பயன்படுத்தி ஆக்ஸிஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கும் முறையையும் மற்றும் கோபிநாத் பாதுகாப்பான முறையில் தகவல் தொழில்நுட்பத்தை பரிமாறும் லாரன்ஸ் கையாட்டிக் அமைப்பு முறையையும் விளக்கி கூறினார். கருத்தரங்கில் பங்கேற்கவர்களை கல்லூரி தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி, துணை முதல்வர் குமாரராமன் முன்னால் முதல்வர் ஜெயபிரகாஷம், இயற்பியல் துறை தலைவர் நாகராஜன் மற்றும் பேராசிரியர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..