Home செய்திகள் இந்து மத பாதுகாவலர் என கூற பாஜக., வுக்கு உரிமை இல்லை: இராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு கண்டன கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., குற்றச்சாட்டு..

இந்து மத பாதுகாவலர் என கூற பாஜக., வுக்கு உரிமை இல்லை: இராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு கண்டன கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., குற்றச்சாட்டு..

by mohan

குடியுரிமை திருத்த திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டம் ராமநாதபுரம் சந்தை திடலில் இன்று நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஏ.வருசை முஹமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.எல்.முகமது பைசல் வரவேற்றார். தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, காங்., மாநில துணை தலைவர் ஏ.ஆர்.சி.வி.சண்முகம் ஆகியோர் பேசினர்.

திமுக மகளிரணி தலைவியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தனது உரையில குடியுரிமை சட்டத்தை எதிர்த்தோர் கடுமையாத தாக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற அப்படி என்ன அவசரம். மத்திய அரசின் சொத்துகளை அரசை நடத்தும் நிலை உள்ளது. மத்திய அரசுக்கு யாரை எல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களை எல்லாம் குடியுரிமை சட்டம் மூலம் தண்டிக்கப்படுவர்.

பெண்களுக்கான குடியுரிமையை நிரூபிக்க உரிய ஆவணங்கள் இல்லை. மத்திய அரசை எதிர்க்கும் விவசாயிகள் உள்ளிட்ட எதிர் கருத்துகள் தெரிவிப்போர் குடியுரிமை இல்லை என மத்திய அரசு சொல்லி விடும். யாரையும் பழிவாங்கும் ஆயுதமே குடியுரிமை சட்டம். திருக்குறளை தேசிய புத்தகமாக அறிவிக்க மாட்டார்கள். ஏனெனில் அது தமிழில் எழுதப்பட்டதால் தேசிய நூலக அறிவிக்க மாட்டார்கள். நம் அடையாளம், ஒற்றுமையே தமிழே. அவர்களுக்கு பிடித்த நடிகர்களை தேடிப் பிடித்து குடியுரிமை சட்டத்தால் ஆபத்தில்லை என பிரசாரம் செய்கின்றனர். நாட்டில் அமைதி நிலவ என்பதற்காக அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றதால், மத்திய அரசு நினைத்ததை எல்லாம் நிறைவேற்ற திட்டமிடுகிறது மத்திய அரசு. இந்திய விடுதலை போரில் ஆர்எஸ்எஸ் உயிர் தியாகம் செய்யவில்லை. இதில் முஸ்லிம்களுக்கே அதிகம் உள்ளது. நாம் நோக்கி பாகிஸ்தான் செல்ல அதிகாரமில்லை. பாகிஸ்தானை பற்றி எந்நேரமும் பேசிக்கொண்டு யோசித்து கொண்டு இருப்பவர் பிரதமர் மோடி ஒருவரே. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவர் என எண்ணி வாக்களித்த பெரும்பான்மை இந்துக்களுக்கு என்ன செய்தது. வேலையின்மையை படித்த இளைஞர்களுக்கு பரிசாக தந்தது. கருவறைக்குள் செல்லும் உரிமையை பெற்று தந்த இயக்கம் திமுக. பாஜக சொல்லும் இந்து மதம் தமிழகத்தில் இல்லை. இந்து மத பாதுகாவலர என பாஜகவுக்கு உரிமை இல்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை மற்றொரு விடுதலை போர் என்றார்.

மாவட்ட காங்., தலைவர் எம்.தெய்வேந்திரன், மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் வ.சத்திய மூர்த்தி, சுப.தங்கவேலன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உ.திசைவீரன், துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் எஸ்.எம்.எம்.அஹமது இப்ராஹிம், மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மாவட்ட துணை தலைவர் எம். அப்துல் முத்தலிபு, மார்க்விஸ்ட் கம்யூ மாவட்ட செயலாளர் வி காசிநாத துரை, மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலிம், மாவட்ட பொருளாளர் அப்துல் நாபிஊ, மஜக மாவட்ட செயலர் முகமது இலியாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பேச்சாளர் செய்யது முகமது ஆலிம், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் எஸ்.முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் கே.முஹமது யாசின், தமுமுக மாவட்ட தலைவர் எம்.பட்டாணி மீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!