அமெரிக்காவில் உள்ள சியாட்டில் சிட்டி கவுன்சிலில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்…

அமெரிக்க நாட்டின் முக்கியமான மாகாணத்தில் ஒன்று சியாட்டில் மாகாணம். இங்கு உலகில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கான அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்றவை அமைந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள அனேக நிறுவனங்களில் இந்தியாவை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு சியாட்டில் மாகாண நகர கவுன்சலில் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டது.  இந்த விவாதத்தின் போது இந்திய மக்கள் மட்டுமல்லாது அந்நாட்டு மக்களும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தது குறிப்பிடதக்கது.

இக்கூட்டத்தில் முஸ்லிம், இந்து, சீக்கியர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும் இந்திய நாட்டின. தூதரகம் சார்பாகவும் ஆயிரக்கனக்கானோர. ஆதரவு கருத்துக்களையும் பதிந்தனர்.

இறுதியில் 7 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 5 பேர் கலந்து கொண்ட நிலையில் 5 உறுப்பினர்களும் இந்திய குடியுரிமை சட்டம் மக்கள் விரோதமானது என தெரிவித்து அச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.  இதுபற்றி அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் கருத்து கூறுகையில், “இந்த தீர்மானத்தை நாங்கள் வெற்றியின் அடையாளதாகவே பார்கிறோம், நிச்சயமாக இந்தியா மட்டுமல்லாமல், பிற நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கும்“ என்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..