ஒட்டன்சத்திரம் நகராட்சியின் சுகாதார சீர்கேடுகள்:- அதிருப்தியில் பொதுமக்கள்.!

ஒட்டன்சத்திரம் நகராட்சியின் சுகாதார சீர்கேடுகள்:- அதிருப்தியில் பொதுமக்கள்.!

ஒட்டன்சத்திரத்தில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகளில் சாக்கடைகளை சுத்தம் செய்து அகற்றாமல் கிடப்பதால், சாக்கடை தண்ணீர் தெருக்களிலும் வீட்டின் அருகிலும் தேங்கி நிற்கும் அவலங்கள் ஏற்ப்பட்டு கொசுத்தொல்லைகளும் மற்றும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் ஏற்ப்பட்டு, பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் ஒட்டன்சத்திரத்தில் புகழ்பெற்ற காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஆட்டிறைச்சி கடைகள்,கோழிக்கடைகள், மீன் கடைகள், போன்றவையும் இருக்கின்றன.இதன் காரணமாக இந்த கடைகளின் கழிவுகள் அனைத்தையும் மார்கெட் அருகிலேயே கொட்டும் காரணமாக, எங்கு பார்த்தாலும் குப்பையும் கழிவுகளுமாகவே மார்கெட் காட்சி அளிக்கிறது. பல்வேறு கழிவுகளையும் இப்பகுதியில் கொட்டி வருவதால் பன்றிகளும் நாய்களும் இப்பகுதியில் சுற்றி சுற்றி வலம் வருகிறதாகவும், பல ஊர்களில் இருந்து மார்கெட் வரும் பொதுமக்கள் அச்சத்தோடும், மூக்கை பொத்திக்கொண்டும் உள்ளே சென்று வெளியே வருகிறோம் என்று கூறுகின்றனர். மேலும் கழிவுகள் கொட்டுவதற்கு தனி இடவசதிகள் ஏதும் இல்லாத காரணத்தால் தான் இந்த பகுதியில் கொட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது தைப்பூச திருவிழா நடைப்பெற்று வருவதால், பழநிக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்கும் வசதிகள் இல்லாத காரணத்தால், ஆண்கள் ஆங்காங்கே நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் அவல நிலையும் துர் நாற்றம் வீசும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தை கடக்கும் பயணிகள் குறிப்பாக பெண்கள், மற்றும் பழநிக்கு செல்லும் பாதயாத்திரிகள் மூக்கை பொத்திக்கொண்டும் முகத்தை சுழித்துக்கொண்டும் செல்லும் அவல நிலை உள்ளது. இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் முபாரக் அலி ஆகியோர் கூறியதாவது, மேற்கண்ட அவல நிலைகள் சம்பந்தமாக பொதுமக்களும் நாங்களும் பல முறை நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். பல புகார் மனுக்களையும் கொடுத்துள்ளோம். இருந்தாலும் எவ்விதமான நடவடிக்கைகளும் இல்லை. என்னென்னவோ வைரஸ் மற்றும் நோய்த்தொற்றுகள் பரவி வருவதாக செய்திகள் வருகிறது. பெரிய அளவிலான நோய்த்தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் முன் ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வார்டுகள், காந்தி மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாக நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இது சம்பந்தமாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளோம். இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்குமா.? என்று பார்ப்போம் என கூறியுள்ளனர்.

நடவடிக்கை எடுப்பார்களா பொருத்திருந்து பார்ப்போம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..