Home செய்திகள் 500 ஆண்டு பழமையான ஸ்ரீமத் பத்ராவதி ஸ்ரீ சமேத பாவனாரிஷி ஸ்ரீமார்க்கண்டேய சுவாமி கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் –

500 ஆண்டு பழமையான ஸ்ரீமத் பத்ராவதி ஸ்ரீ சமேத பாவனாரிஷி ஸ்ரீமார்க்கண்டேய சுவாமி கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் –

by mohan

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமத் பத்ராவதி ஸ்ரீ சமேத பாவனாரிஷி ஸ்ரீ மார்க்கண்டேயர் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில்.இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் மிகவும் பழமையும் தொன்மை வாய்ந்ததாகும்.நினைத்த காரியம், வேண்டிய வரங்களை நிறைவேற்றி தரும் வகையிலும் அனைத்து சமூகத்தினரும் வழிபடும் வகையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடபட்டு கடந்த வாரம் ஸ்ரீ விக்னேஷ்வரர் பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வானில் கருடன் வட்டமிட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் ஹர ஹர மகாதேவா கோஷங்கள் மத்தியில் ராஜகோபுரம், மூலஸ்தானம் உள்ளிட்ட சகல கோபுர கலசங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது.அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து 2000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!