36 சவரன் தங்க நகைகள் திருடிய பெண் கைது:-மற்றும் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவருக்கும் காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்.!

மதுரை மாநகர் ஜோன்ஸ்புரம், பசுமலையில் வசிக்கும் இராஜமாணிக்கம் மகன் பால்ஜாம்ராஜ் என்பவர் தனது வீட்டில் இருந்த 36 சவரன் தங்க நகைகளை யாரோ திருடிவிட்டதாக V1- திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று திருட்டு வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பால்ஜாம்ராஜ் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்த சுப்புலட்சுமி, க/பெ சந்தானதுரை, பசுமலை, மதுரை என தெரியவந்தது எனவே அவரை இன்று V1- திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி. மதனகலா அவர்கள் சுப்புலட்சுமியை கைது செய்து அவரிடமிருந்து 36 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

மதுரை மாநகர பொதுமக்கள் அனைவருக்கும் காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்.

தங்களது வீடுகளில் வேலை செய்து வரும் பணிப்பெண்களின் முழு விபரங்களை முதலில் நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

அவர்களின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

அவர்கள் இதற்கு முன்பு அவர்கள் வேலை செய்த இடத்தில் அவர்களைப் பற்றி முழுமையாக விசாரித்து அதன் பின்னர் வேலைக்கு நியமிக்கவேண்டும்.

 முன்பின் தெரியாத நபர்களை தயவுசெய்து வீட்டு வேலைக்கு நியமிக்க வேண்டாம்.

விலை உயர்ந்த பொருட்கள், பணம் போன்றவை தங்களது வீடுகளில் இருக்குமானால் கட்டாயம் தங்களது வீடுகளில் CCTV கேமிரா பொருத்தப்பட்டு, வீட்டு வேலை செய்பவரின் நடவடிக்கைகளை அன்றாடம் கண்காணிக்கப்பட வேண்டும்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..