Home செய்திகள் வீ.கே.புதூர் அரசு பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து-மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய சக மாணவன் கைது.!

வீ.கே.புதூர் அரசு பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து-மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய சக மாணவன் கைது.!

by Askar

வீ.கே.புதூர் அரசு பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து-மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய சக மாணவன் கைது.!

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் +2 படிக்கும் மாணவன் ஷாருக்கான் (வயது17) இவரது தந்தை இஸ்மாயில் வீராணம் பகுதியை சேர்ந்தவர். அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்து வருபவர் வீரகேரளம்புதூர் முருகன் என்பவரது மகன் சரவணன் (வயது17) இவர்கள் இருவரும் வீரகேரளம்புதார் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் 03.02.2020 திங்கள் கிழமை மாலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 04.02.2020 செவ்வாய் கிழமை காலையில் ஷாருக்கான் வீராணத்திலிருந்து பள்ளிக்கு செல்ல பஸ் மூலம் வீரகேரளம்புதூர் பஸ் நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஷாருக்கானை மாணவன் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாருக்கானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஷாருக்கான் கழுத்து மற்றும் கையில் சரமாரியாக குத்தப்பட்டு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஷாருக்கான் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கழுத்தில் இருபத்தி இரண்டு தையலும்,கையில் ஆறு தையலும்,போடப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. தகவலறிந்த வீரகேரளம்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று +2 மாணவன் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் படிக்கும் சக மாணவனே கத்தி எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவலத்தால் பள்ளியில் பயிலும் ஏனைய மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!