Home செய்திகள் அவசரகால வாகனம் இல்லாததால் நோயாளிகள் அவதி

அவசரகால வாகனம் இல்லாததால் நோயாளிகள் அவதி

by mohan

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இம் மருத்துவமனை வளாகத்தில் இணை இயக்குநர் (மருத்துவம் , ஊரகம், மற்றும் குடும்ப நலம் ) அலுவலகம் உள்ளது. பல்வேறு மருத்துவ வசதிகள் கொண்ட இம் மருத்துவமனையில் சரிவர உயர்தர சிகிச்சை மேற்கொள்வது கிடையாது. ஒரு சிறு மருத்துவம் என்றாலும் இம் மருத்துவமனையில் இருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை என்ற பெயரில் பரிந்துரை செய்து நோயாளிகளை அனுப்பி வைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது இம் மருத்துவமனை.தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சொந்த ஊரான இப் பெரியகுளத்தில் உள்ள பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லை என மருத்துவர்கள் வெளிப்படையாகவே நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள்வசம் கூறுகின்றனர்.  உயிருக்கு ஆபத்தான நிலைமையில் ஒரு குழந்தையை சிகிச்சைக்காக இம் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் நிலைமை மோசமாக உள்ளது என்று கூறி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.மேற்படி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகியும், தகவல் கொடுக்கப்பட்டும் 108 போன்ற எந்த ஒரு அவசர கால வாகனமும் வரவில்லை. பின் மருத்துவர்கள் மூலம்108 க்கு போன் செய்யப்பட்டு ஒன்றரை மணி நேரம் கழிந்த நிலையில் வத்தலகுண்டில் இருந்து சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளியை இறக்கிவிட்டு பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த ‘ குழந்தையை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தலைமைச் செவிலியர்களால் அவசரகால வாகனமான 108 ஓட்டுநர்கள், மற்றும் டெக்னீசியன்கள் தங்கும் அறை பறிக்கப்பட்டு 108 ஓட்டுநர்கள் அவசரகாலவாகனத்துடன் இம் மருத்துவமனை வளாகத்தில் நுழைய விடாமல் தடுத்து வந்துள்ளனர். தற்போது அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அவர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இம்மருத்துவமனையில் உள்ள இரண்டு அவசர கால வாகனத்தில் உயிர் காக்கும் சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதால் நோயாளிகளின் நிலைமை மோசமாகவே உள்ளது. முன்னாள் முதல்வரின் சீரிய திட்டங்களில் ஒன்றான 108 ஆம்புலன்ஸ் திட்டமானது உயிரைக் காப்பாற்ற என்ற நிலை மாறி தேனி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் உயிரைப் பறிக்க என்ற நிலையிலே இருந்து வருவதாக அரசின் இலவச மருத்துவப் பயனாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், துரித நடவடிக்கை மேற்கொள்ளுமா?

இவண்..சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!