ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி பிப்ரவரி 18ல் மாவட்டம் முழுவதும் சாலை மறியல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி பிப்ரவரி 18ல் மாவட்டம் முழுவதும் சாலை மறியல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.! ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்துசெய்யக் கோரி பிப்ரவரி 18ம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு கூட்டம் வி.தொ.ச மாவட்ட துணை தலைவர் கே.ராஜா தலைமையில் திருவாரூர் சிங்காரவேலர் நினைவரங்கத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம் கலந்துகொண்டு எதிர்கால கடைமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் இரெ.ஞானமோகன், முன்னாள் எம்.எல்.ஏ கே.உலகநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அ.பாஸ்கர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமயந்தி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, குடியுரிமை திருத்தச் சட்டம், 2019, மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு, அரசியல் சட்டம் பிரிவு 15(1)& 14- மற்றும் மத, இனச் சார்பின்மைக்கு எதிரானது, இசுலாமிய மக்களை இச்சட்டம் திட்டமிட்டு புறக்கணிக்கிறது, மனித குல விரோத, மனித உரிமை பறிப்பு நடவடிக்கை, குடியுரிமை திருத்தச் சட்டம்,2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெற வேண்டும், இந்தியாவை நாடி வந்த அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்கிட வேண்டும், என வலியுறுத்தி திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சார்பில் பிப்ரவரி 2முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடதௌதுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது, இதனை மிக சிறப்பாக நடத்துவது, மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசின் அனுமதி மற்றும் சுற்றுசூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ளது, இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், மத்திய அரசின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டா மாவட்டத்தில் அனுமதிக்ககூடாது என வலியுறுத்தி பிப்ரவரி 18 ம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது, இதில் அனைத்து பகுதியினரையும் பங்குபெற செய்யும் வகையில் வெகுமக்கள் போராட்டமாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..