மாணவர்கள் தொழில்முனைவோராக ஆவது எப்படி? ஐடி வேலையை விட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து வரும் முன்னாள் மாணவர் ‘ டிப்ஸ் ‘

திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி(என்எம்சி) கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் பைதான், ஆர், எக்செல் பயன்படுத்தி டேட்டா அனாலிசிஸ் செய்வது குறித்து 3 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சியை முதல்வர் பெரியசாமி தொடங்கி வைத்தார். கல்லூரி தலைவர் பொன் பாலசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார். பயிற்சியை துறைத் தலைவரும், பைதான் தனிக் குழு உறுப்பினர் முரளிதரன், பேராசிரியர்கள் மற்றும் பைதான் தனிக் குழு உறுப்பினர்கள் பொன்வேல் அழகு லட்சுமி, பிரியா, கல்பனா, இணை பேராசிரியர்கள் வழங்கினர். பயிற்சியில் பைதான், ஆர், விரிதாள் போன்ற ஆய்வு தரவு பகுப்பாய்வு கருவிகள் மூலம் டேட்டா கிளினீங், ப்ரீ பிராஸஸிங், கட்டமைக்கப்பட்ட தரவை உருவாக்குதல், புலங்களை பிரித்தெடுப்பது மற்றும் டேட்டா விசுவலைசேஷன் ஆகியவை குறித்து செயல்முறை விளக்கம் தரப்பட்டது. இதில் 45 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். நிறைவு நாளில் மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதல்வர் பெரியசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கல்லூரி முன்னாள் மாணவரும், ஐடி வேலையை விட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி அளித்து ப்ரீலான்சராக பணிபுரியும் வேல்ராஜன் விருந்தினராக பங்கேற்று சான்றிதழ் வழங்கிப் பேசினார். அப்போது அவர், ஆன்லைனில் பணம் சம்பாதிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங், ப்ரீலான்சர் ஆக பணி செய்யலாம். கம்ப்யூட்டர் துறையில் படித்து ஐடி நிறுவனத்தில் 10 ஆண்டு நல்ல சம்பளத்தில் பணி புரிந்தேன். அதில் திருப்தி இல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கினேன். போதிய அனுபவம் இல்லாததால் மீண்டும் வேறு வேலை செய்து தற்போது ப்ரீலான்சர் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து வருகிறேன். மாணவர்கள் டேட்டா அனாலிசிஸ் மற்றும் டூல்ஸ் வழியாக வாடிக்கையாளர்களுக்கான திட்டங்கள் நேரடியாக செயல்படுத்த தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் தங்கள் திட்டத்தை மாணவர்கள் தொழில் முனைவோராக சிறப்பாக செய்யமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.தனது பணிகள் குறித்து அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியை பைதான் கோர் குழு உறுப்பினர்கள், துறை உதவிப் பேராசிரியர் இசபெல்லா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..