பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2016-ம் வருடம் மதுரை மாநகர் பழங்காநத்தம், தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த ஒரு நபர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து காவல்துறையினர் புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இவ்வழக்கு 31.01.2020-ம் தேதியன்று மதுரை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கனம் நீதித்துறை நடுவர் ஜெ.புளோரா  எதிரி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.2,00,000 வழங்கவும் உத்தரவிட்டார். சிறந்த முறையில் புலன்விசாரணை முடித்து குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் தக்க தண்டனை வழங்க உதவிய 2016 ம் ஆண்டு தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர்  முருகேஸ்வரிக்கு சிறுமியின் பெற்றோர் தங்களது நன்றியைத் தெரிவித்தார்கள். புலன்விசாரணை அதிகாரியை மதுரை மாநகர காவல் ஆணையர் . டேவிட்சன் தேவாசீர்வாதம்  பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image