ரயிலிருந்து தவறி விழுந்த பயணி யார் என்று ரயில்வே போலீஸ் விசாரணை

மதுரை மாவட்டம் செல்லூர் கூடல் நகர் ரயில்வே தண்டவாளம் பாதையில் காலை ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் மதுரை ரயில்வே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் .சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர் நேற்று இரவு சென்னை செல்லும் ஏதோ ஒரு ரயிலில் பயணம் செய்திருக்கலாம் எனவும் தவறிக் கீழே விழுந்து மரணம் அடைந்திருக்கலாம் என தெரியவருகிறது. இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அணிந்திருந்த சட்டையின் பாண்டியன் டைலர்ஸ்ஸ் தேனி என போட்டிருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர் .இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் துறையிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image